Home » தமிழ்நாடு » 100 கிலோ பூக்களால் கருணாநிதியின் ஓவியம்

100 கிலோ பூக்களால் கருணாநிதியின் ஓவியம்

வேலூர், ஆக.9: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி, வேலூரில் அவரது உருவத்தை நூறு கிலோ பூக்களைக் கொண்டு மலர் ஓவியம் வரைந்து வியாபாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலமின்றி காவேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த செய்தி திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கருணாநிதியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வேலூரில் அனைத்து கடைகளும் நேற்று அடைக்கப்பட்டிருந்தன. நேதாஜி மார்க்கெட்டில் உள்ள காய்கறிக் கடைகள், பூக்கடைகள், பல சரக்குக் கடைகளும் முழுமையாக அடைக்கப் பட்டிருந்தன.

இதனிடையே, கருணாநிதி மறைவுக்கு வேலூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் திமுகவினர், வியாபாரிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் மூத்த தலைவரான கருணாநிதியின் உருவப்படத்தை வேலூர் வியாபாரிகள் பூக்களால் வரைய ஏற்பாடு செய்தனர்
அதன்படி நேதாஜி மார்கெட் முன் 100 கிலோ கொண்ட பல வண்ண மலர்களால் கருணாநிதியின் உருவத்தை இருவேறு இடங்களில் மிகப்பெரிய மலர் ஓவியமாக வரைந்து வியாபாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல், வேலூர் மாநகரம் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் கருணாநிதியின் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*