Home » சினிமா » அமெரிக்காவில் படப்பிடிப்பை ரத்து செய்த விஜய்

அமெரிக்காவில் படப்பிடிப்பை ரத்து செய்த விஜய்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் சர்கார் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னையில் தொடர்ந்து நடைபெற்றது.

ஒரு சில காட்சிகள் வெளி மாநிலங்களிலும் நடைபெற்றது. இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு கடந்த சனிக்கிழமை அமெரிக்காவில் உள்ள லாஸ்கோவிற்கு சென்றது. அங்கு பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் திமுக தலைவர் கருணாநிதி மரணம் அடைந்த செய்தி கேள்விப்பட்டவுடன் நேற்று அங்கு நடந்த ஷýட்டிங்கை விஜய் ரத்து
செய்தார். கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*