Home » சினிமா » உங்கள் சரித்திரம் சகாப்தமாய் இருக்கும் விஜயகாந்த் இரங்கல் கவிதை

உங்கள் சரித்திரம் சகாப்தமாய் இருக்கும் விஜயகாந்த் இரங்கல் கவிதை

அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வரும் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கருணாநிதி இறந்த செய்தி கேட்டவுடன் வீடியோவில் அழுதபடி நேற்று இரங்கல் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இன்று காலை இரங்கல் கவிதை ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். அந்த கவிதை வருமாறு:-

உலகமே உங்களை கலைஞரே! என்று அழைத்தாலும் உணர்வு பூர்வமாக உங்களை அண்ணா என்று வாஞ்சையோடு அழைத்து உங்களுடன் பழகிய அந்த நாட்களை எண்ணி வியக்கிறேன். விம்முகிறேன். தள்ளாத வயதிலும் ஓய்வுக்கே ஓய்வு! என்பதன் அர்த்தத்தை உழைப்பு என்று மாற்றிக்காட்டிய ஒப்பற்ற தலைவரே!

அந்திசாயும் பொழுது ஒரு சூரியன் மறைவது இயற்கை. ஆனால் 7.8.2018 அன்று மாலை 6.10 மணி அளவில் இரு சூரியன் ஒரு சேர மறைந்ததோ! என்று எண்ணும் வண்ணம், இவ்வுலகையே இருட்டாக்கியது போன்ற ஒரு உணர்வை தந்து சென்றவரே!

உங்கள் உடல் இவ்வுலகை விட்டு பிரிந்தாலும் உங்கள் சரித்திரம் சகாப்தமாய் என்றும் உங்களுடனேயே இருக்கும். உங்களை வணங்குகிறேன். உங்களின் நினைவாக என்றும் தமிழன் என்று சொல்லடா! தலை நிமிந்து நில்லடா! என்ற உங்கள் வாசகத்துடன் உங்கள் விஜி என்னும் விஜயகாந்த். இவ்வாறு கவிதை எழுதி உள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*