Home » விளையாட்டு » பதிலடி கொடுக்குமா இந்தியா?

பதிலடி கொடுக்குமா இந்தியா?

லார்ட்ஸ், ஆக. 9:  இங்கிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கவுள்ள 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டை வென்றெடுத்து, இந்தியா அணி பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து – இந்தியா அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற உள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில், இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. வானிலையை பொறுத்தவரை, லண்டனில் தற்போது வெயில் கொளுத்துகிறது. இதே சீதோஷ்ண நிலை நீடித்தால் ஆடுகளம் உலர்ந்து, பிற்பகுதியில் சுழற்பந்து வீச்சு எடுபடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்திய அணி 2-வது சுழற்பந்து வீச்சாளராக இடக்கை சுழல் சூறாவளி குல்தீப் யாதவை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆட வாய்ப்பு இருப்பதை இந்திய கேப்டன் கோலியும் நேற்றைய பேட்டியின் போது உறுதிப்படுத்தியிருந்தார். பர்மிங்காம் டெஸ்டில் சொதப்பியதுபோல் அல்லாமல், பேட்ஸ்மேன்கள் பொறுப்பை உணர்ந்து அவசரம் காட்டாமல் ஆடுகளத்தன்மைக்கு ஏற்ப ஆட வேண்டியது அவசியமாகும். கணிசமான ஸ்கோரை குவித்து விட்டால் நிச்சயம் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்க முடியும்.

முதலாவது டெஸ்டில் கிடைத்த வெற்றியால் உற்சாகத்தில் உள்ள இங்கிலாந்து வீரர்கள் அதே உத்வேகத்துடன் களம்காண்பதாலும், முதலாவது டெஸ்டில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியவீரர்கள் மல்லுக்கட்டுவதாலும் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*