Home » விளையாட்டு » ‘கோலி ஒரு லெஜண்ட்’ – மனம்திறக்கும் தோனி

‘கோலி ஒரு லெஜண்ட்’ – மனம்திறக்கும் தோனி

ஜார்க்கண்ட், ஆக. 9:  இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் கோலியின் ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர், கோலி மிகப் பிரமாதமாக விளையாடி வருகிறார்.

கோலி ஏற்கெனவே லெஜண்ட் எனும் ஸ்தானத்தை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டார். எனக்கு மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. கோலி தொடர்ந்து சில ஆண்டுகளாகவே தனது மிகச்சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.

ஒரு அணியின் தலைவனாக இருப்பவன் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அந்த இன்னிங்ஸில் கோலி அதைத்தான் செய்தார். இதன் மூலம் அணி மேலும் பல வெற்றிகளை பெரும். கோலிக்கு என் வாழ்த்துகள் என தோனி மனமாற பாராட்டியுள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*