Home » குற்றம் » கேபிள் டிவி ஆப்பரேட்டர் மீது சரமாரி தாக்குதல்

கேபிள் டிவி ஆப்பரேட்டர் மீது சரமாரி தாக்குதல்

சென்னை, ஆக. 9:  தண்டையார்பேட்டையில் கேபிள் டிவி ஆப்பரேட்டர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

தண்டையார்பேட்டை நேதாஜி நகர் மெயின் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 45). இவர் இதே பகுதியில் கேபிள் டிவி அலுவலகம் நடத்திவந்தார். இதனிடையே, நேற்றிரவு 9.30 மணியளவில் தனது அலுவலகம் முன்பு நின்றபடி அவரது நண்பர் கனிராஜூடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, பைக்கில் வந்த 3 பேர் உடன் கையில் எடுத்துவந்த இரும்பு ராடு கொண்டு தியாகராஜனை கண்மூடித்தனமாக தாக்கினர்.

சத்தம்கேட்டு பொதுமக்கள் கூடவே மர்மநபர்கள் தப்பியோடியுள்ளனர். ரத்தவெள்ளத்தில் கிடந்த தியாகராஜனை பொதுமக்கள் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மர்ம ஆசாமிகளின் கொலைவெறி தாக்குதலில், படுகாயடைந்த தியாகராஜனின் தலையில் மட்டும் 25 தையல்கள் போடப்பட்டுள்ளன. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது குறித்து, வழக்குப்பதிந்துள்ள ஆர்.கே.நகர் போலீசார் அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆதாரமாக கொண்டு மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*