Home » Flash News » காசி கங்கை கரையில் கருணாநிதிக்கு சிரார்த்தம்

காசி கங்கை கரையில் கருணாநிதிக்கு சிரார்த்தம்

வாரணாசி, ஆக9:மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு புகழ் பெற்ற காசியில் கங்கை கரையில் அவரது நினைவாக சிரார்த்தம் செய்யப்பட்டது.

காசியில் உள்ள கங்கை நதிக்கரையில் இரவில் நடைபெறும் கங்கா ஆர்த்தி நிகழ்ச்சி உலகப் புகழ்பெற்றதாகும். அதிலும் உயிரிழந்தவர்களுக்கு சிரார்த்தம் கொடுப்பது மிகவும் புண்ணியமானதாக கருதப்படுகிறது.

கருணாநிதியின் உடல் நேற்று மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டபோது இங்கு வர முடியாத காசி வாழ் தமிழர்களும், வடநாட்டவர்களும் கங்கை கரைக்கு சென்று சிரார்த்தம் நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

கருணாநிதியின் புகைப்படத்தை யும், அவரது பெயர் எழுதப்பட்ட பதாகைகளையும் கையில் சிலர் ஏந்தியிருந்தார்கள். பூசாரிகள் சிறப்பு பூஜை நடத்தி கற்பூர ஆரத்தி காட்டினார்கள். பகுத்தறிவாளரான கருணாநிதிக்கு அவரது ஆதரவாளர்கள் கங்கை கரையில் நடத்திய இந்த சிறப்பு ஆராதனையை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*