Home » குற்றம் » 18 ஆண்டுகளுக்கு பின் கொலையாளி கைது

18 ஆண்டுகளுக்கு பின் கொலையாளி கைது

திருவள்ளூர், ஆக. 9: மகளின் நிச்சயதார்த்தத்திற்கு பணம் தர மறுத்த லாரி உரிமையாளரை கொலை செய்து விட்டு, 18 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதிசேர்ந்தவர் தவர்சிங்.இவர் லாரி உரிமையாளர். இவரிடம் மங்குபாய் லாரிஓட்டுனராகவும், கிளினீராக பிரேம் சந்த் பணியாற்றி வந்துள்ளனர்.

இந்த நிலையில் லாரி டிரைவர் மங்குபாய் தனது மகளின் திருமணத்திற்கு தவர்சிங்கிடம் பணம் கேட்டராம்.அதற்கு அவர் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், கடந்த 2000ம் ஆண்டு லாரி உரிமையாளர் தவர்சிங், லாரி ஓட்டுநர் மங்குபாய், கிளீனர் பிரேம் சந்த் ஆகிய 3 பேரும் அந்த பகுதியில் உள்ள ஏரியில் குளித்துள்ளனர்.

அப்போது, லாரி ஓட்டுநர் மங்குபாய், தமது மகளின் நிச்சயதார்த்தத்திற்கு பணம் கேட்டாராம். அதற்கு லாரி உரிமையாளர் தவர்சிங் மறுத்துள்ளார்.இதில் ஆத்திரமடைந்த மங்குபாய் தவர்சிங்கை இரும்பு ராடால் தலையில் அடித்து விட்டு, அவர் வைத்திருந்த ரூ.50000 பணத்தை எடுத்து கொண்டு, அவரது உடலை ஏரிக்கரையிலேயே பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு மங்குபாயும் பிரேம்சந்தும் சென்றுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக திருவள்ளூர் போலீசார் கொலையாளிகளை தேடிவந்த நிலையில், லாரி கிளீனர் பிரேம் சந்தை கைது செய்தனர்.

மேலும் தலைமறைவான முக்கிய குற்றவாளியான மங்குபாய் மஹாராஷ்டிராவில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலின் படி தனிப்படைபோலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.18 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளியை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*