Home » Flash News » இந்தோனேஷியாவில் நில நடுக்கம் 91 பேர் பலி

இந்தோனேஷியாவில் நில நடுக்கம் 91 பேர் பலி

ஜகார்த்தா, ஆக.6: இந்தோனேஷியாவின் லாம்போக் தீவில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை 91 பேர் பலியாகி உள்ளனர்.இந்தோனேஷியாவில் லம்போக் தீவுக்கு அருகே 45 கி. மீ. சுற்றளவுக்கு மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட  சிறு சிறு நில அதிர்வுகளும் ஏற்பட்டன.இதுவரை 91 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். 2-வது முறையாக இங்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டு உள்ளது.

மருத்துவமனையில் இருந்து நோயாளிகளும் பாதுகாப்பு நிறைந்த பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அங்கிருந்த கட்டிடங்களும் சேதமடைந்து உள்ளன. நிலநடுக்கத்தினை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. எனினும் கடலுக்கு அருகில் இருந்த கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்துள்ளது.

இந்தோனேஷியாவின் லாம்போக் தீவில் கடந்த 29-ந்தேதி 6.4 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 17 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் இதே பகுதியில் மீண்டும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. கடந்த 2004-ல் ஏற்பட்ட 9.1 என்ற ரிக்டர் கடும் நிலநடுக்கத்தினை அடுத்து சுனாமி ஏற்பட்டு பல்வேறு நாடுகளிலும் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*