Home » Flash News » ஐசிசி தரவரிசை: விராட் கோலி முதலிடம்

ஐசிசி தரவரிசை: விராட் கோலி முதலிடம்

லண்டன், ஆக.5: ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தர வரிசையில் முதல் இடத்தை பிடித்தார் விராட் கோலி.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி தோல்வியை தழுவிய போதிலும் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் இன்னிங்சில் 149 ரன்களையும் இரண்டாவது இன்னிங்சில் 51 ரன்களையும் குவித்தார்.இதனால் புதிதாக வெளியிடப்பட்டுள்ள பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மொத்தம் 934 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் 2-ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*