Home » விளையாட்டு » கவுன்டி அனுபவம் உதவியதாக பெருமிதம்: இஷாந்த்

கவுன்டி அனுபவம் உதவியதாக பெருமிதம்: இஷாந்த்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 8-ஆவது முறையாக 5 விக்கெட்டை வீழ்த்தினார் இஷாந்த் சர்மா. அவர் கூறுகையில், சùஸக்ஸ் அணியில் இடம் பெற்று கவுன்டி ஆட்டத்தில் விளையாடிய அனுபவம் மிகவும் உதவியாக இருந்தது. இதனால் கிடைத்த நம்பிக்கை, அனுபவத்தால் சிறப்பாக பந்துவீசினேன்.

சஸக்ஸ் அணியில் விளையாடிய இஷாந்த் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒரு அரை சதமும் கவுன்டி ஆட்டத்தில் அடித்தார். இங்கிலாந்துடன் முதல் டெஸ்டில் 5-51 விக்கெட்டை வீழ்த்தினார்.

ஐபிஎல் ஆட்டங்களில் பங்கேற்காதது அதிருப்தியாக இருந்தாலும், கவுண்டி ஆட்டத்தில் பங்கேற்றது தற்போது நன்மை செய்துள்ளது. இங்கிலாந்தின் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு பந்து சிக்கக் கூடாது என திட்டமிட்டு ஸ்விங் செய்தேன்.

சூரிய வெளிச்சம் இருந்தால் பிரச்னை இல்லை. ஆனால் மேக மூட்டமாகவும், மழை பெய்தால் மட்டுமே ஸ்விங் ஆகிறது என்றார்

இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் ஆட்டமிழந்த போது, அதை தரக்குறைவாக இந்திய வீரர் இஷாந்த் சர்மா கொண்டாடினார் எனக்கூறி ஆட்ட ஊதியத்தில் 15 சதவீதத்தை அபராதமாக விதித்து ஐசிசி உத்தரவிட்டது. இஷாந்த் தனது மொழி, சைகை, மூலம் மலானை அவமதிக்கும் விதத்தில் செயல்பட்டார் என புகார் எழுந்துள்ளது.
ஜெப் குரோ தலைமையிலான நடுவர் குழு இந்த அபராதத்தை விதித்துள்ளது. இஷாந்தும் தனது செய்கை தவறு என்பதை ஒப்புக் கொண்டார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*