Home » சினிமா » ரசிகரை சகட்டுமேனிக்கு விளாசிய நடிகை பிரியா

ரசிகரை சகட்டுமேனிக்கு விளாசிய நடிகை பிரியா

சென்னை, ஜூலை 30:மேயாதமான் படம் மூலம் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். அதன் பிறகு கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை அவர் வெளியிட்டிருந்தார். அதை பார்த்த ரசிகர் ஒருவர், நீங்கள் மட்டும் தான் குடும்ப பாங்கான பெண் என்று நினைத்திருந்தேன். உங்களைத்தான் கனவு கன்னியாக எண்ணியிருந்தேன். ஆனால் இந்த படத்தை பார்த்தபிறகு நான் வேறு ஆளை பார்த்து கொள்ளலாம் என நினைக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள பிரியா பவானி சங்கர், ஒருவரின் ஆடையை வைத்து அவரை தீர்மானிப்பது சரியல்ல. இந்த உடையை அணியக்கூடாது என எந்த கலாச்சாரமும் சொல்லவில்லை. அதையும் மீறி நீங்கள் வேறு ஒருவரை தேர்ந்தெடுப்பது பற்றி எனக்கு கவலையில்லை. இவ்வாறு பதிலடி கொடுத்திருந்தார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*