மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=32894
Export date: Tue Dec 11 5:35:54 2018 / +0000 GMT

ஸ்ரீரெட்டிக்கு ராகவா லாரன்ஸ் பதிலடி


சென்னை, ஜூலை 30:நடிகர் லாரன்ஸ் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் தெரிவித்த ஸ்ரீரெட்டிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் பதிலடி கொடுத்துள்ளார். 7 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது குற்றச்சாட்டுகள் ஏன் கூற வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பல்வேறு நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார். தமிழ் திரையுலகத்தை சேர்ந்த நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர் சி ஆகியோர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்ததுடன் தனக்கு திரைப்படங்களில் வாய்ப்பு தருவதாக கூறி தன்னை ஏமாற்றி பயன்படுத்திக்கொண்டதாகவும் அவர்கள் மீது நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியிருந்தார். இந்நிலையில் இதற்கு எந்தவிதமான கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்த நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று ஸ்ரீரெட்டி புகாருக்கு பதிலளித்துள்ளார்.

7 ஆண்டுக்கு முன்பு எடுக்கப்பட்ட தெலுங்கு படத்திற்காக என் மீது குற்றச்சாட்டுகளை கூறியுள்ள ஸ்ரீரெட்டி ஏன் இத்தனை ஆண்டுகள் மௌனம் காத்தார் என்று புரியவில்லை. ஹோட்டல் அறையில் ருத்ராட்ச மாலைகளை வைத்து பூஜைகளை செய்து விட்டு அவருடன் நெருக்கமாக இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

எப்படி ருத்ராட்சம் உள்ளிட்ட பூஜை பொருட்களை ஹோட்டல் அறைக்கு எடுத்து வர முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். அவருக்கு உண்மையிலேயே படத்தில் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால் ஒரு பொது மேடையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ஒரு காட்சியை நான் சொல்கிறேன். அதற்கு அவர் சரியாக நடித்து விட்டால் நான் உடனே என் படத்தில் அவருக்கு வாய்ப்பு தர தயாராக இருக்கிறேன் என அவர்
சவால் விடுத்துள்ளார்.
Post date: 2018-07-30 09:05:45
Post date GMT: 2018-07-30 09:05:45

Post modified date: 2018-07-30 09:05:45
Post modified date GMT: 2018-07-30 09:05:45

Export date: Tue Dec 11 5:35:54 2018 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com