Home » Flash News » ரஜினி சென்னை திரும்புகிறார்

ரஜினி சென்னை திரும்புகிறார்

சென்னை, ஜூலை 30:சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். டேராடூனில் நடந்து வரும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொண்டு நடித்து வருகிறார். ரஜினி, சிம்ரன் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அவருடைய பகுதியை முடித்துக் கொண்டு நாளை மறுநாள் இரவு அவர் சென்னை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து தலைவர்கள் அவரை சந்தித்து வருகின்றனர். கமல், பிரபு உள்ளிட்டோரும் சந்தித்து நிலையில் தொலைபேசி மூலம் ஸ்டாலினிடம் ரஜினி நலம் விசாரித்தார். சென்னை திரும்பியதும் ரஜினி மருத்துவமனைக்கு நேரில்
சென்று பார்ப்பார் எனவும் தெரிகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*