Home » உலகம் » ஈஃபிள் டவரின் கீழ் ஆட்டம் போட்ட பாப் பாடகி கைது

ஈஃபிள் டவரின் கீழ் ஆட்டம் போட்ட பாப் பாடகி கைது

பாரிஸ், ஜூலை 28: பாரிஸ் நகரில் ஈஃபிள் டவர் முன் நடுரோட்டில் நடனம் ஆடிய அழகியை போலீசார் கைது செய்தனர். பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாப் பாடகி கிரே நிக்கோல் தனது தோழியுடன் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈஃபிள் கோபுரத்திற்கு சென்று உற்சாக மிகுதியில் சாலையின் நடுவே இரு புறங்களிலும் வாகனங்கள் செல்ல தங்களது நடனத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தனர். இந்தக்காட்சிகளை கிரே நிக்கோல் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.

இதுதொடர்பாக காவல்துறை தரப்பில், இவர்கள் இருவரும் சாலையின் நடுவே அனுமதியின்றி நடனமாடி பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக செயல்பட்டதால் கைது செய்யப்பட்டுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*