மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=32679
Export date: Sun Dec 16 19:46:11 2018 / +0000 GMT

நடிகை ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு தரும் குட்டிபத்மினி


சென்னை, ஜூலை 25:தெலுங்கு, தமிழ் நடிகர்கள் மீது பாலியல் புகார்களை கொடுத்து பரபரப்பை உண்டாக்கி உள்ள நடிகை ஸ்ரீரெட்டிக்கு தொலைக்காட்சி தொடர்களிலும், இணைய தள தொடர்களிலும் நடிக்க வாய்ப்பு அளிப்பதாக பிரபல தொலைக்காட்சி சீரியல் தயாரிப்பாளரும், நடிகையுமான குட்டி பத்மினி அறிவித்து இருக்கிறார்.

தெலுங்கு பட கதாநாயகர்கள் மீது குற்றச்சாட்டுக்களை கூறி வந்த நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் நடிகர்கள் ஸ்ரீகாந்த், லாரன்ஸ், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிவிட்டதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி சீரியல் தயாரிப்பாளர் நடிகை குட்டி பத்மினி கோலிவுட் வட்டாரத்தில் வாய்ப்புக்காக பல இளம் பெண்கள் இரையாகி இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். பலரால் ஏமாற்றப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். துயரத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு உதவ வேண்டும் என்ற அடிப்படையில் அவருக்கு தொலைக்காட்சி தொடர்களில் வாய்ப்பு அளிக்க தயாராக இருக்கிறேன் என்று குட்டி பத்மினி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
Post date: 2018-07-25 10:39:26
Post date GMT: 2018-07-25 10:39:26

Post modified date: 2018-07-25 10:45:03
Post modified date GMT: 2018-07-25 10:45:03

Export date: Sun Dec 16 19:46:11 2018 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com