Home » Flash News » பாகிஸ்தானில் வாக்குப்பதிவு தொடங்கியது

பாகிஸ்தானில் வாக்குப்பதிவு தொடங்கியது

இஸ்லாமாபாத், ஜூலை 25:பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தானில் 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஆட்சி, கடந்த மே மாதம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற தேர்தல், இன்று நடக்கிறது. மொத்தமுள்ள 342 இடங்களுக்கு, 272 பேர் நேரடியாக மக்கள் மூலம் நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

மீதமுள்ள 70 இடங்கள் பெண்கள், சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆட்சியைக் கைப்பற்ற 172 இடங்களைக் கைப்பற்ற வேண்டும். இந்நிலையில் 272 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை 8 தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 10 கோடியே 59 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*