Home » உலகம் » ‘ருவாண்டாவில் இந்திய தூதரகம் திறக்கப்படும்’: மோடி

‘ருவாண்டாவில் இந்திய தூதரகம் திறக்கப்படும்’: மோடி

கிகாலி, ஜூலை 24: கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் விரைவில் இந்தியத் தூதரகம் திறக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  5 நாள் பயணமாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, முதலில் ருவாண்டாவுக்கு சென்றார். கிகாலி விமானநிலையத்தில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடியும், ருவாண்டா அதிபர் பால் ககாமே இருதரப்பு உறவு மேம்பாடு, ருவாண்டாவில் இந்திய முதலீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேச்சு நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, மோடி – பால் ககாமே முன்னிலையில் இருநாட்டு அதிகாரிகளும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

இதனையடுத்து ருவாண்டாவில் இருக்கும் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அரங்கில் கூடியிருந்த இந்தியர்கள் உற்சாகமாக அவரை வரவேற்றனர்.
பின்னர் உரையாற்றிய மோடி, ருவாண்டா அதிபர் பால் ககாமே தம்மை விமானநிலையத்திற்கே வந்து வரவேற்றது, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழங்கப்பட்ட கவுரவமாகும் எனக் கூறினார்.
கிகாலியில் விரைவில் இந்தியத் தூதரகம் திறக்கப்படும் எனத் தெரிவித்த பிரதமர் மோடி, அது வெறும் தகவல் தொடர்புக்காக மட்டுமின்றி விசா, பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றுக்கும் உதவக்கூடியதாக இருக்கும் என்றும் கூறினார்.

முன்னதாக, ருவாண்டாவுக்கு வருகை தந்துள்ள முதல் இந்தியப் பிரதமர் மோடி என்றும், அவரது இந்தப் பயணம் இருநாட்டு உறவுகளிலும் ஒருமைல் கல்லாக திகழும் என்றும் அதிபர் பால் ககாமே தெரிவித்தார்.
முன்னதாக ருவாண்டா அரசு செயல்படுத்தி வரும் கிரிங்கா என்ற திட்டத்திற்கு இந்தியா சார்பில் 200 பசுக்களை இலவசமாக வழங்குவதற்கான சான்றிதழை ருவாண்ட் அதிபரிடம் மோடி வழங்கினார். இந்த திட்டத்தின் கீழ் ருவாண்டா அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பசு மாடு வழங்க உள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*