Home » Flash News » மோடி அரசு வெற்றி பெறுவது உறுதி-மத்திய அமைச்சர்

மோடி அரசு வெற்றி பெறுவது உறுதி-மத்திய அமைச்சர்

புதுடெல்லி, ஜூலை 19:மக்களவையில் நாளை நடைபெறவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் மோடி அரசு வெற்றி பெறும் என்றும், அரசுக்கு 3 ல் 2 பங்கு எம்பிக்கள் ஆதரவாக உள்ளனர் என்றும் மத்திய அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடரில் முதல் நாளான நேற்று மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்தது இதற்கு எதிர்கட்சிகளை சேர்ந்த 50 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து தீர்மானத்திற்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதி அளித்தார். இதன் மீது நாளை விவாதம் நடத்தி வாக்கெடுப்பு நடைபெறும் என்று அவர் அறிவித்தார்.

இதற்கு முன் 2003ல் பிஜேபி ஆட்சியில் இருந்த போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது வாஜ்பாய் தலைமையிலான பிஜேபி ஆட்சி வகித்து வந்தது. அப்போதும் பிஜேபிக்கு பெரும்பான்மை இருந்தது. 312 பேர் பிஜேபிக்கு ஆதரவு அளித்து பிஜேபி பெரிய வெற்றி பெற்றது.

இந்தநிலையில் தெலுங்கு தேசம் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் நாளை தோற்பது உறுதி என நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மொத்த எம்பிக்கள் 544. 10 இடங்கள் காலியாக இருப்பதால் இப்போதைய பலம் 534. இதில் அரசுக்கு பெரும்பான்மை பலத்துக்கு தேவை 268 ஆனால் பிஜேபிக்கு மட்டுமே 273 உறுப்பினர்கள் உள்ளனர். கூட்டணி கட்சிகளில் 41 எம்பிக்கள் உள்ளனர். கூட்டணியை ஆதரிக்கும் கட்சிகள் 73 பேர் இருப்பதால் மொத்த பலம் 314 உயருகிறது.

எனவே நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைவது உறுதி என அமைச்சர் அனந்தகுமார் கூறியுள்ளார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் மொத்த பலம் 147 என கணக்கிடபட்டுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்த தெலுங்கு தேசதிற்கு 16 பேர் உள்ளனர். அவர்களில் திவாகர்ரெட்டி என்ற எம்பி அதிருப்தியாளராக உள்ளார்.

இவர் நாடாளுமன்றத்திற்கு செல்ல மாட்டேன் என்று சொந்த தொகுதியான அனந்தபூர் சென்றுவிட்டார். இதனிடையே சிவசேனா கட்சி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று அனந்தகுமார் கூறியுள்ளார். பிஜேபியின் அதிருப்தி எம்பி சத்ருகன் சின்கா அரசை எதிர்த்து வாக்களிக்க போவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*