மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=32380
Export date: Sat Sep 22 16:59:26 2018 / +0000 GMT

சிறுமி பாலியல் வழக்கில் அதிர்ச்சி தகவல்


சென்னை, ஜூலை 19: பிரசவத்தின்போது பெண்களுக்கு கொடுக்கப்படும் வலிமரப்பு மருந்துகள் பயன்படுத்தி சிறுமியை பலாத்காரம் செய்ததாக, இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான லிப்ட் ஆப்ரேட்டர் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.

அவர் முன்னதாக மருத்துவமனை ஒன்றில் பணியாற்றியவர் என்றும், அதன் மூலம் இந்த மருந்தை அறிந்தவர் என்றும் கூறப்படுகிறது.சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த 11 வயது சிறுமியை 17 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காது கேளாத வாய்பேச முடியாத அந்த சிறுமியை 7 மாதங்களாக அந்த கும்பல் மிகவும் கொடுமையான முநையில் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெண்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது, அந்த 17 காமக்கொடூரர்களையும், வழக்கறிஞர்கள் உட்பட பொதுமக்கள் தாக்கியதே கொந்தளிப்பின் உச்சக்கட்டம். இந்த வழக்கில் நாள்தோறும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.

இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய 17 பேரையும் புழல் சிறையில் அடைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையின் போது குற்றவாளிகள் கூறிய தகவல்கள் போலீசாரையே அதிர வைத்துள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான 66 வயதான ரவிகுமார், அந்த சிறுமி வசிகும் அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் ஆப்ரேட்டராக பணியாற்றிவந்தார்.

இதற்கு முன், அதே பகுதியில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் வார்டு பாயாக வேலை பார்த்துள்ளார். அப்போது, பெண்களுக்கு ஏற்படும் பிரசவ வலிகளை குறைப்பதற்காக மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகளையும், அதன் விவரங்களையும் அவர் தெரிந்து கொண்டுள்ளார். அதே மருந்தினை சிறுமிக்கு ஊசியால் செலுத்தி பலாத்காரம் செய்ததாக அவர் போலீசில் தெரிவித்துள்ளார். தனது முதுமையால் யாருக்கும் தன்மீது சந்தேகம் வரவில்லை என்றும்

சிறுமியால் வாய் பேச முடியாததை சாதகமாக பயன்படுத்திக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கொடுஞ்செயலுக்கு காரணக்கர்த்தாவாக இருந்துள்ள லிப்ட் ஆப்பரேட்டர் ரவிக்குமாரிடம், துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர் சிராஜூதின் தலைமையிலான, அயனாவரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மற்றவர்களிடம் இருந்து பணம் வாங்கி கொண்டு அந்த சிறுமியுடன் இருப்பதற்காக அனுமதித்தாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ரவிக்குமாரிடம் விசாரணை நடந்துவருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொடுஞ்செயலில் தொடர்புடைய 17 கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 6 பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
Post date: 2018-07-19 09:16:14
Post date GMT: 2018-07-19 09:16:14

Post modified date: 2018-07-19 09:35:06
Post modified date GMT: 2018-07-19 09:35:06

Export date: Sat Sep 22 16:59:26 2018 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com