Home » Flash News » நள்ளிரவு வேட்டையில் சிக்கிய 54 பேர்

நள்ளிரவு வேட்டையில் சிக்கிய 54 பேர்

சென்னை, ஜூலை 19: பரங்கிமலை காவல் மாவட்டத்தில் நேற்றிரவு போலீசார் நடத்திய சோதனையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த 54 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை நகரில் வழிப்பறி மற்றும் குற்றங்களை குறைப்பதற்காக போலீசார் இரவு நேரத்தில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பழைய குற்றவாளிகள் போலீசார் பிடியில் சிக்காமல் சுற்றித்திரியும் நபர்கள் ஜாமீனில் வெளிவந்து மீண்டும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பவர்கள் என ஏராளமானோரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

சமீபத்தில் சென்னை புறநகரான மீஞ்சூர் பகுதியில் நடைபெற்ற இரவு நேர சோதனையில் 100 பேர் பிடிப்பட்டனர். இதேபோன்று நேற்று இரவு சென்னை பரங்கிமலை காவல்மாவட்டத்திற்கு உட்பட்ட பரங்கிமலை, மீனம்பாக்கம், பல்லாவரம், சேலையூர், தாம்பரம், மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் துணை கமிஷனர் முத்துசாமி தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த 54 பேர் பிடிப்பட்டனர். மேலும் சட்டப்பிரிவு 110-ன் கீழ் 16 பேர் போலீசாரிடம் சிக்கினர். எழுதி வாங்கிக்கொண்டு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் பழைய குற்றவாளிகள் 2 பேரும் பிடிப்பட்டனர். ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரங்கிமலை பகுதியில் ஒரே இரவில் 54 பேர் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*