Home » Flash News » தேர்தலில் போட்டியா?: ரஜினி பேட்டி

தேர்தலில் போட்டியா?: ரஜினி பேட்டி

சென்னை, ஜூலை 15:மக்களவை தேர்தலில் போட்டியிடு வது குறித்து இன்னும் முடிவு செய்ய வில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

மேலும் 8 வழிச்சாலை பயன்தரும் திட்டம் பயன் தரும் திட்டம்தான் என் றும், ஆனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இதை செயல்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
ஈரோட்டில் சாலையில் கிடந்த ரூ.50,000-ஐ போலீசில் ஒப்படைத்த சிறுவன் யாசின் படிப்பை செலவை தாம் ஏற்பதாக அவர் தெரிவித்தார்.

ஈரோடு கனி ராவுத்தர் குளம் நந்தவனதோட்டம் பகுதியை சேர்ந்த பாட்ஷா என்ற துணி வியாபாரியின் மகனான முகமது யாசின் சாலையில் கிடந்த ரூ.50,000 போலீசில் ஒப்படைத்தான்.
ரஜினியை சந்திக்க வேண்டும் என்ற ஆசையை மன்ற நிர்வாகிகளிடம் தெரிவித்ததையடுத்து இன்று காலை சென்னை போயஸ் கார்டனில் ரஜினிகாந்தை யாசின் தனது குடும்பத்தோடு சந்தித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ‘யாசினின் செயல் பாராட்டுக்குரியது. அவரை பாராட்ட வார்த்தைகளே இல்லை. எதிர்க்காலத்தில் அவர் என்ன ஆக வேண்டும் என நினைக்கிறாரோ, அதற்கு உதவி செய்வேன். யாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன்’ என கூறினார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்வி களுக்கு அவர் பதில் அளித்தார். மக்களவை தேர்தலுக்கு முன் கட்சியின் பெயரை அறிவித்து, தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேட்டதற்கு மக்களவை தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை. அந்த சமயத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்.

பெருந்தலைவர் காமராஜர் பற்றிய கேள்விக்கு பதில் அளித்தபோது, காமராஜர் ஒரு சிறந்த தலைவர், அவரைப் போன்று சுயநலமற்ற தலைவர்கள் தமிழகத்தில் உருவாக வேண்டும். சேலம்-சென்னை இடையே போடப் படும் 8 வழிச்சாலை திட்டம் பற்றி கேள்விக்கு பதில் அளித்த அவர், இது ஒரு நல்ல திட்டம், நாட்டிற்கு பயன் தரும், ஆனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவர் களுக்கு போதிய இழப்பீடு கொடுத்து செயல்படுத்த வேண்டும் என்றார்.

தமிழ்நாட்டில் ஊழல் அதிகரித்து இருப்பதாக பிஜேபி தலைவர் அமித்ஷா கூறியிருக்கிறாரே என்று கேட்டதற்கு அவர் பேசியது பற்றி தனக்கு தெரியாதும் என்றும், கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார். லோக் ஆயுக்தா சட்டம் ஊழலை ஒழிக்க பயன்படும் என்பதால் இந்த சட்டம் தேவைதான் என்றும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நாட்டிற்கும் நல்லதுதான் என்றும் அவர் கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*