Home » Flash News » பிலிம்சேம்பர் தேர்தல் : இடைக்கால தடை

பிலிம்சேம்பர் தேர்தல் : இடைக்கால தடை

சென்னை, ஜூலை 13: ஏ.எம். ரத்தினம் சார்பில், வழக்கறிஞர் தியானேஸ்வரன் தாக்கல் செய்த மனுவில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பி, வேட்புமனு தாக்கல் செய்தேயாரிப்ன். ஆனால், எனது வேட்புமனுவை, தேர்தல் குழு நிராகரித்துவிட்டது.

இத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர், வேறு எந்த சங்கத்திலும் இருக்கக் கூடாது என்று தேர்தல் விதி இருப்பதாக கூறி, எனது வேட்பு மனுவை நிராகரித்து உள்ளனர் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த

நீதிபதி சதீஷ்குமார், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். விசாரணையை வரும் 27ம் தேதி தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*