Home » Flash News » அரசுக்கு அவகாசம் அளிக்க கோர்ட் மறுப்பு

அரசுக்கு அவகாசம் அளிக்க கோர்ட் மறுப்பு

சென்னை, ஜூலை 13:தமிழக கோவில்களில் 3000 பாதுகாப்பு அறைகள் கட்டுவது குறித்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு 2021 வரை அரசுக்கு அவகாசம் தர சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழகம் முழுவதும் கோவில்களில் சிலைகள் திருடப்பட்டு கடத்தப்படுவதை தடுக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன், கும்பகோணத்தை சேர்ந்த வெங்கட்ராமன் ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை நீதிபதி மகாதேவன் விசாரித்து வருகிறார்.

இந்த வழக்கில் சிலைகளை பாதுகாப்பது தொடர்பாக 23 வழிமுறைகளை பின்பற்றுமாறு அரசுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் முக்கியமாக கோவில்கள் தோறும் ஸ்ட்ராங் ரூம் அமைப்பது தொடர்பான உத்தரவை நிறைவேற்றாதது குறித்து நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து இருந்தது. மேலும் முறையான நடவடிக்கை எடுக்காவிடில் சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடப்படும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழக கோவில்களில் 3000 பாதுகாப்பு அறைகள் அமைக்க வேண்டியது உள்ளது என்றும், இவற்றை கட்டி முடிக்க 2021 வரை அவகாசம் வழங்க வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா சார்பில் கோரிக்கை விடப்பட்டது. இதை ஏற்க நீதிமன்றம் நீதிமன்றம் அனுமதி மறுத்து விட்டது. இவ்வளவு அவகாசம் அளித்தால் மீதமுள்ள சிலைகளும் காணாமல் போய்விடும் என்று நீதிபதி கூறினார்.

மாவட்ட வாரியாக டெண்டர் விட்டு ஒரே வாரத்தில் அறைகளை கட்டி முடிக்க முடியும் என்று நீதிபதி கூறினார். இது தொடர்பாக காவல் துறையுடன் ஆலோசனை நடத்தி 2 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் 2021க்குள் கோவில் வாரியாக பாதுகாப்பு அறைகள் கட்டுவது தொடர்பான அட்டவணையையும் அறநிலையத் துறை தாக்கல் செய்து இருந்தது. தற்போது உள்ள கோவில்களில் 11,512 பாதுகாப்பு அறைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*