Home » Flash News » ஸ்ரீகாந்த், லாரன்ஸ் மீது நடிகை பாலியல் புகார்

ஸ்ரீகாந்த், லாரன்ஸ் மீது நடிகை பாலியல் புகார்

சென்னை, ஜூலை 13:நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி தன்னை ஏமாற்றி விட்டதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பான குற்றச்சாட்டுகளை வெளியிட்டிருக்கிறார்.

என் உயிரே போனாலும் சரி, நடிகர்களின் பாலியல் தொல்லைகளை அம்பலப் படுத்துவேன் என்றும் அவர் கூறினார். பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி அண்மையில் தெலுங்கு பட கதாநாயகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆந்திராவை கலக்கிய இந்த புயல் தற்போது தமிழகத்தையும் தாக்கி உள்ளது. நடிகர்கள் ஸ்ரீகாந்த், லாரன்ஸ் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தற்போது அவர் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். மாலைச்சுடர், நியூஸ்டுடேக்கு அளித்த பேட்டியில் ஸ்ரீரெட்டி கூறியதாவது:-

கேள்வி: ஏ.ஆர். முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் அல்லாமல் வேறு யார் மீதும் புகார் உள்ளதா?
பதில்: பத்திரிகையாளராக இருந்து கொண்டு இப்படி எல்லாம் கேட்கக் கூடாது. பேஸ் புக் அல்லது டுவிட்டரில் அதையெல்லாம் தெரிவிப்பேன். தெலுங்கு பட உலகம் நடிகைகளை செக்ஸ் பொம்மைகளை போல பயன்படுத்துகிறார்கள். இதற்கு தெலுங்கு நடிகைகள் சம்மதிக்காததால் வடமாநிலங்களில் இருந்து நடிகைகளை வரவழைக்கிறார்கள்.
தெலுங்கு பட உலகம் போல அல்லாமல் தமிழ் திரையுலகம் வித்தியாசமான கதையம்சங்களுடன் படங்களை தயாரிப்பதால் தமிழ் படங்களில்நடிக்க வேண்டும் என்ற ஆவலுடன் வந்தேன். ஆனால் இங்கும் அதே நிலைதான்.

கேள்வி: ஏ.ஆர். முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர் உங்களுக்கு என்ன உறுதி மொழி கொடுத்து ஏமாற்றி விட்டார்கள்?
பதில்: கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்றா சொன்னேன், சினிமா வாய்ப்பு தான் கேட்டேன்.

கேள்வி: உங்களுக்கு உதவி செய்ய யாரும் வரவில்லையா? நடிகை வரலட்சுமி ஒரு அமைப்பை நடத்துகிறார். அவரிடம் சொன்னீர்களா?
பதில்: யாரிடமும் நான் உதவி கேட்கவில்லை. வேறு எவரும் இதுபற்றி கேட்கவில்லை. பெரிய நடிகைகள் பேச ஆரம்பித்தால் தான் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி ஏற்படும்.

கேள்வி: நடிகர் சங்கத்திடம் புகார் செய்தீர்களா?
பதில்: என்ன நடந்தது என்பது தெரியாமலேயே நடிகர் சங்க தலைவர் விஷால் என்னை கண்டித்து பேசியிருக்கிறார். என்னிடம் என்ன நடந்தது என்று அவர் கேட்டிருந்திருக்கலாம்.

கேள்வி: ஆந்திராவில் அரசு உங்களுக்கு உதவி செய்ய முன் வரவில்லையா?
பதில்: தெலுங்கானா அரசு நடிகர்களுக்கு ஆதரவாக தான் பேசுகிறது.

கேள்வி: தமிழக அரசிடம் புகார் செய்தீர்களா?
பதில்: இல்லை, ஆனால் தமிழக அரசு எனக்கு உதவி செய்யும் என்று நம்புகிறேன்.

கேள்வி: இன்னும் பலர் மீது புகார் இருக்கிறதா?
பதில்: நிறைய பேர் இருக்கிறார்கள். அதை வெளிக்கொணர்வேன். மற்ற நடிகைகள் குறிப்பாக பெரிய நடிகைகள் பேசினால்தான் இது முடிவுக்கு வரும்.

கேள்வி: இப்படி நடிகர்கள் மீது புகார் கூறுகிறீர்களே, உங்களுக்கு மிரட்டல் வருகிறதா?
பதில்: நிறைய மிரட்டல் வருகிறது. என் உயிரே போனாலும் கவலைப்பட மாட்டேன். இதனை அம்பலப்படுத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*