Home » உலகம் » உலக கோப்பை:பார்வையற்றவர் காட்டிய பரவசம்

உலக கோப்பை:பார்வையற்றவர் காட்டிய பரவசம்

மாஸ்கோ, ஜூலை 13: மாஸ்கோவில் லூஸ்னிக் ஸ்டெடியத்தில் நேற்று நடைபெற்ற உலக கோப்பை அரை இறுதி போட்டியை 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நேரில் கண்டுகளித்தனர்.

முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தை 47 லட்சம் மக்கள் தொகையே கொண்ட குட்டி நாடான குரோஷியா வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்து உள்ளது. இந்த போட்டியை காண வந்தவர்களில் 2 கண்களும் தெரியாத ராபர்ட் கோலிஜிவாக் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். சிறுவயதிலேயே கால்பந்து வீராங்கனையாக திகழ்ந்த இவர் 15 வயதிலேயே கண்பார்வை இழந்தார்.

ஆனாலும் கால்பந்து மீதான ஆர்வம் இவரை விட்டு அகலவில்லை. நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியை காண்பதற்காக தனது தம்பியுடன் வந்து இவர் அமர்ந்திருந்தார். கிராபிக்ஸ் முறையில் வழங்கப்பட்ட வர்ணனையை இவர் கேட்டு ரசித்ததுடன் தம்பியின் உதவியுடன் வினாடிக்கு வினாடி ஓசைகள் மூலமே அனைத்தையும் கேட்டறிந்தார்.

பார்வை தெரியாவிட்டாலும் போட்டியை நேரில் பார்த்த உணர்வு எனக்கு ஏற்பட்டது. நான் 6 மாதத்திலேயே பிறந்தவள் என்பதால் எனக்கு பிறவியிலேயே கண்கோளாறு இருந்தது. ஆனாலும் குழந்தை பருவத்திலேயே கால்பந்து விளையாடுவேன். இரு கண்களும் பார்வையிழக்கும் வரை விளையாடிக்கொண்டே இருந்தேன் என்று அவர் கூறியது உருக்கமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் கோல் அடிக்கும் போது மைதானத்தில் எழுந்த ஒலி தன்னை பரவசப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இரு கண்களையும் இழந்த கோலிஜிவாக் குரோஷியாவில் ஜாக்ரிப் என்ற இடத்தில் உள்ள கல்லூரியில் வரலாற்று பேராசிரியராக பணியாற்றுகிறார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*