Home » Flash News » சென்னையில் இன்று இரவும் மழை பெய்ய வாய்ப்பு

சென்னையில் இன்று இரவும் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை, ஜூலை 12:சென்னையில் இன்று இரவும் காற்று டன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

கடந்த 2 நாட்களாக சென்னையில் இரவில் மழை பெய்து வருகிறது. இத னால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசுகிறது. இந்த மழை இன்னும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மைய அறிக்கை கூறுகிறது.

தமிழகத்தில் தற்போது வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழை பெய்து வருகிறது. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று வருகிறது.
சென்னையை பொறுத்தவரை மேக மூட்டமாக காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் அடுத்த 2 நாட்க ளுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறுகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*