Home » விளையாட்டு » வரலாற்று சாதனை படைத்த குரோஷியா

வரலாற்று சாதனை படைத்த குரோஷியா

மாஸ்கோ, ஜூலை 12: 52 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை வெல்லும் கனவோடு களமிறங்கிய இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.

ரஷ்யாவில் நடந்துவரும் ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இறுதிப்போட்டியில் பிரான்சுடன் மோதப்போவது யார்? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலான இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை, குரோஷியா அணி எதிர்கொண்டது. மாஸ்கோவிலுள்ள லூஸ்னிக்கி மைதானத்தில் நேற்றிரவு 11.30 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 52 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்
கோப்பையை வெல்லும் வெறியோடு களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஆட்டத்தின் 5-வது நிமிடத்திலேயே அந்த அணி வீரர் டிரிப்பர் அபாரமாக கோலடித்தார்.

அதன்படி, ஆட்டத்தின் முதல் பாதி இறுதியில் 1-0 என இங்கிலாந்து முன்னிலையில் இருந்தது. ஆட்டத்தின் 68-வது நிமிடத்தில் குரோஷியாவின் பெரிசிக் கோலடித்து சமநிலையை உருவாக்கினார். இதனையடுத்து, வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் முதல் பாதியில், இரு அணிகளும் கோலடிக்கவில்லை. 109-வது நிமிடத்தில் குரோஷியாவின் மன்ட்சுகிக் கோலடிக்க 2-1 என குரேஷியா அசத்தல் வெற்றி பெற்று, இங்கிலாந்துக்கு அதிர்ச்சியளித்தது. இதன்மூலம், உலகக்கோப்பை பைனலில் முதல்முறையாக நுழைந்து குரோஷியா வரலாற்று சாதனை படைத்துள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*