Home » குற்றம் » போலி வளையல்களை அடகு வைத்த இரண்டு வாலிபர்கள் கைது

போலி வளையல்களை அடகு வைத்த இரண்டு வாலிபர்கள் கைது

சிதம்பரம், ஜூலை 12: சிதம்பரம் அருகே போலி வளையல்களை அடகு வைத்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை டநத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சிதம்பரம் அருகே கீழ்புவனகிரியை சேர்ந்தவர் துரைராஜன் (வயது71) இவர் கீழ் புவனகிரியில் நகை அடகு கடை வைத்துள்ளார்.

இந்த கடையில் சீர்காழி எருக்கூர் பகுதியை சேர்ந்த சேரன் (வயது 32) மற்றும் சிதம்பரம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது41) ஆகியோர் மூன்று வளையல்களை எடுத்து சென்று தங்க வளையல்கள் என்று கூறி அடகுவைத்தனர்.அப்போது சந்தேகம்அடைந்த மார்வாடி அந்த மூன்று வளையல்களையும் சோதனை செய்த போது அது போலியாவை என்று தெரிய வந்தது.

இதுகுறித்து புவனகிரி காவல்நிலையத்தில் துரைராஜன் புகார் செய்தார். அதன்பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து
சேரன், சுரேஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து மேலும் விசாரனை செய்து வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*