Home » குற்றம் » வாலிபரை அடித்து மிரட்டி செயின் பறிப்பு

வாலிபரை அடித்து மிரட்டி செயின் பறிப்பு

சென்னை, ஜூலை 12:  ஐ.சி.எப்., காந்தி நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 23). ஜேசிபி ஓட்டுநராக வேலை பார்த்துவரும் இவர், நேற்று பணிமுடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது, வழிமறித்த மர்மநபர்கள் இருவர் ராமச்சந்திரனை அடித்து அவர் அணிந்திருந்த 2 சவரன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பமுயன்றுள்ளனர். சத்தம் கேட்டு திரண்ட பொதுமக்கள் கொள்ளையர்களில் ஒருவரை வழிப்பறி செய்த நகையுடன் பிடித்து ஐ.சி.எப். போலீசில் ஒப்படைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து பிடிப்பட்ட நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் காந்திநகரை சேர்ந்த ரஞ்சித் (வயது 25) என்பதும், தப்பியோடியவர் பக்கெட் ராஜன் என்பதும் தெரியவந்தது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*