Home » சினிமா » விஜய் சேதுபதியின் ‘96’ ஃபர்ஸ்ட் லுக்

விஜய் சேதுபதியின் ‘96’ ஃபர்ஸ்ட் லுக்

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் 96 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலையில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதன் டீசர் இன்று மாலை ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘96’ படம் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றது. இந்த படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படத்தை ஒளிபதிவு செய்த சி பிரேம் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலையில் வெளியிடப்பட்டது. இப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசரை பார்க்க என்னால் பொறுத்திருக்க முடியவில்லை என த்ரிஷா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து இணையத்தில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வேகமாக பகிரப் பட்டு டிரெண்டிங்கில் உள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*