Home » சினிமா » அமெரிக்காவில் இருந்து அரசியலுக்கு வரும் விஜய்

அமெரிக்காவில் இருந்து அரசியலுக்கு வரும் விஜய்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் சர்கார். இதில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி கோலிவுட் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட விஜய்யின் ஒரு புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், படத்தை பற்றிய செய்திகள் தினந்தோறும் வந்து கொண்டே இருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் போன்று ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் கூகுள் சிஇஏ சுந்தர் பிச்சையைப் போல் பெரிய பொறுப்பில் விஜய் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்.

சொந்த ஊர் திரும்பும் அவர், இங்கு நடக்கும் ஆட்சியையும், அதிகாரத் தையும் பார்த்து பொங்கி எழுகிறார். அரசியல்வாதிகளால் மக்கள் பாதிக் கப்படுவதை எண்ணி அவர்களை அழிக்க திட்டம் தீட்டுகிறார்.

தனது சாதுர்யத்தால் எப்படி மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கினார் என்பது போன்று படத்தின் கதை அமைக்கப்பட்டது. பொலிடிக்கல் திரில்லராக உருவாகி வரும் சர்கார் அதிரடி திருப்பங்களும், காட்சிக்கு காட்சி அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கும் வகையில் திரைக்கதை ஓட்டம் அமைந்துள்ளது.

சென்னையில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் பாடல் காட்சிகளை படமாக்க விரைவில் படக்குழு அமெரிக்கா செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*