Home » சினிமா » நயன்தாராவை புகழும் சமந்தா

நயன்தாராவை புகழும் சமந்தா

தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கோலமாவு கோகிலா படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை நெல்சன் இயக்கி உள்ளார். இதில் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இதற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நிர்மல் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார்.

படத்தில் இடம்பெற்றுள்ள கல்யாண வயசு… பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் கடந்த 5-ந் தேதி டிரைலர் வெளியானது. இதுவும் இணையத்தில் அதிக லைக்குகளை பெற்றது. இந்நிலையில் டிரைலரை பார்த்த சமந்தா, நயன்தாராவை புகழ்ந்து தள்ளியுள்ளார். அருமையான நடிப்பை நயன் வெளிப்படுத்தி உள்ளதாக அவர் பாராட்டி உள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*