Home » அரசியல் » பிளாஸ்டிக் பைகளுக்கு விரைவில் தடை

பிளாஸ்டிக் பைகளுக்கு விரைவில் தடை

சென்னை, ஜூலை 5: பிளாஸ்டிக் பைகளுக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என்று அமைச்சர் கருப்பண்ணன் கூறினார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜ் பேசுகையில், தமிழகத்தல் பிளாஸ்டிக் பைகள் தடை செய்வது தொடர்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஓர் அறிவிப்பை வெளியிட்டு அதற்கான அரசாணை கூட வெளியிடப்படாமல் உள்ளது.

பிளாஸ்டிக் பைகளால் மழைநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் சேகரிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. ஆகவே பிளாஸ்டிக் பைகளை தடை செய்வது குறித்து அரசு உரிய அறிவிப்பை வெளியிட முன் வருமா என்று கேட்டார்.

இதற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் பேசுகையில், இது தொடர்பாக நேற்று தான் முதல்வருடன் அமைச்சர்கள் ஓர் ஆய்வை மேற்கொண்டாம்.பிளாஸ்டிக் பைகளை தடை செய்வது தொடர்பாக முதல்வருடன் விரிவாக ஆலோசித்துள்ளோம்.

அதன் அடிப்படையில் உரிய அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*