Home » Flash News » ரஜினி மக்கள் மன்றத்தில் விரைவில் களையெடுப்பு?

ரஜினி மக்கள் மன்றத்தில் விரைவில் களையெடுப்பு?

சென்னை, ஜூலை 12:ரஜினி மக்கள் மன்றத்தினரின் செயல்பாட்டில் ரஜினிகாந்த் திருப்தியடையவில்லை என்பதால் விரைவில் களையெடுப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதனால் நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்கு முன்னோடியாக ரஜினி மக்கள் மன்றம் செயல்படுகிறது. இதன் மாநில தலைமைச் செயலாளராக ராஜு மகாலிங்கமும், ரசிகர் மன்ற தலைமை நிர்வாகியாக சுதாகரும் உள்ளனர். மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமிக்கும் பணியும் கிட்டதட்ட நிறைவடைந்துவிட்டது.

டார்ஜிலிங்கில் படப்பிடிப்பு பணிகளை முடித்துவிட்டு சென்னை திரும்பி உள்ள ரஜினி கட்சியின் தொடக்கவிழா குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதனிடையே ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளின் செயல்பாடு திருப்தியளிக்கவில்லை என்று ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங் களில் கூறப்படுகிறது.

குறிப்பாக திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு குடும்பத்தினரின் கப்பல் நிறுவனத்துடன் மன்ற நிர்வாகிக்கு ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனுடனும் மக்கள் மன்றத்தின் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மக்கள் மன்றத்தின் செயல்பாடுகள் பற்றிய தகவல்கள் உடனுக்குடன திமுகவுக்கு தெரிந்து விடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தவிர நிதி வசூல் தொடர்பாகவும் பல்வேறு புகார்கள் கூறப்படுகின்றன.

ராகவேந்திரா திருமண மண்டபத் துக்குள் நுழைய கட்சி நிர்வாகிகள் சிலருக்கு ஏற்கனவே தடை விதிக்க பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கட்சியின் அலுவலகமும் கோடம்பாக்கத்தில் தனி இடத்தில் செயல்படுகிறது.

இந்நிலையில் களையெடுப்பு நடவடிக்கை விரைவில் இருக்கும் என எதிர்பார்ப்பதால் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் இடையே பரபரப்பு நிலவுகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*