Home » Flash News » ரூ.1லட்சம் மதிப்புள்ள மது பாட்டில் பறிமுதல்

ரூ.1லட்சம் மதிப்புள்ள மது பாட்டில் பறிமுதல்

விழுப்புரம், ஜூலை.12: புதுச்சேரியில் இருந்து கோட்டக்குப்பம் வழியாக காஞ்சிபுரத்துக்கு காரில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் அனிச்சங்குப்பம் சோதனைச்சாவடியில் நேற்று காலை கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஏட்டு அமானுல்லா மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அந்த காரினுள் 8 அட்டைப் பெட்டிகளில் 360 மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து காரில் வந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் காஞ்சிபுரம் மாவட்டம் கொட்டிவிளாகம் கிராமத்தை சேர்ந்த நாகமுத்து மகன் மதன் (வயது 28) என்பதும், புதுச்சேரியில் இருந்து கோட்டக்குப்பம் வழியாக காஞ்சிபுரத்திற்கு மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து மதனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*