Home » Flash News » கள்ளதுப்பாக்கி வாங்க முயன்ற பெண் கைது

கள்ளதுப்பாக்கி வாங்க முயன்ற பெண் கைது

சென்னை,ஜூலை 12:10 வயது மகனை கடத்திச்சென்று கொலை செய்த கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டும் நோக்கத்தில், ரூ. 2லட்சம் கொடுத்து துப்பாக்கி வாங்க முயன்ற பெண் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:

சென்னை எம்ஜிஆர் நகர் நெசப்பாக்கம் பாரதிநகரைச் சேர்ந்த கார்த்திகேயன் மனைவி மஞ்சுளா. இவர் மின்சார அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.மஞ்சுளாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த நாகராஜனுக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது. மனைவியின் கள்ளக்காதல் கணவன் கார்த்திகேயனுக்க தெரியவந்தது.இதானல் தம்பிகளுக்கு இடையே தினமும் பிரச்சனை ஏற்பட்டது. ஒருகட்டத்தில் கள்ளக்காதலனுடன் உறவை மஞ்சுளா துண்டித்துள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த கள்ளக்காதலன் நாராஜன் மஞ்சுளாவின் 10 வயது மகன் ரிதேஷ் சாயை டியூஷனில் இருந்து அழைத்துக்சென்று சேலையூர் புதியதாக கட்டி வந்த அடுக்குமாடி குடியிருப்பில் அடைத்து வைத்து கம்பியால் தாக்கி கொலை செய்தான். இதுசம்பந்தமாக நாகராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

இந்தநிலையில் மஞ்சுளா ,தனது மகனை கொலை செய்த கள்ளக்காதலன் நாகராஜியை கொலை செய்யும் நோக்கத்தில் துப்பாக்கி வாங்க முயன்றார். அப்போது மேற்கு சிஐடி நகரைச்சேர்ந்த பிரசாந்த் (வயது 24) பள்ளிக்கரணையைச்சேர்ந்த சுரேஷ் (வயது 31)ஆகியோரை அணுகினார். அப்போது கள்ளத்துப்பாக்கி வாங்க வேண்டுமானால் ரூ. 2லட்சம் ஆகும் என்று கூறியுள்ளனர்.
இதற்கு சம்மதித்து அவர்களிடம் ரூ. 2லட்சம் மஞ்சுளா கொடுத்துள்ளார்.அவற்றை பெற்றுகொண்ட அவர்கள் இருவரும் போலியான பொம்மை துப்பாக்கி வாங்கி கொடுத்துள்ளனர்.

இதைபார்த்த மஞ்சுளா ஏமாற்றிய இருவர்மீது சைதாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். வழக்கை பதிவு செய்த இன்ஸ்பெக்டர் விஜயகுமார் பொம்மை துப்பாக்கி வாங்கி கொடுத்த பிரசாந்த் மற்றும் சுரேஷ் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.அப்போது கள்ளத்துப்பாக்கி வாங்கி தர பணம் கொடுத்ததாகவும் நாங்கள் பொம்மை துப்பாக்கி வாங்கி கொடுத்தாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து மஞ்சுளாவிடம் நடத்திய விசாரணையில் தனது மகனை கொலை செய்த கள்ளக்காதலன் நாகராஜியை கொலை செய்வதற்காக ரூ. 2லட்சம் கொடுத்து துப்பாக்கி வாங்கி வரும்படி கூறினேன் என்றார்.இதுகுறித்த சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவுசெய்து கள்ளக்காதலனை தீர்த்துக்கட்ட துப்பாக்கி வாங்க முயன்ற பெண் மற்றும் போலி துப்பாக்கி வாங்கி கொடுத்த இருவர் உட்பட மூன்றுபேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*