Home » சினிமா » இணையத்தை கலக்கும் விஜய்-ன் புகைப்படம்

இணையத்தை கலக்கும் விஜய்-ன் புகைப்படம்

சென்னை, ஜூலை 11: சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி கோலிவுட் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட விஜய்யின் ஒரு புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.ஏரஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் சர்கார். இதில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், படத்தில் நடித்துவரும் நடிகை வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்யின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் விஜய் புகைப்படத்தை பதிவிட அனுமதி வழங்கிய ஏ.ஆர். முருகதாசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியிடப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே விஜய் ஸ்டைலாக புகைப்பிடிக்கும் காட்சி வைரலானது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*