Home » விளையாட்டு » இங்கிலாந்தை வீழ்த்த குரோஷியா வியூகம்

இங்கிலாந்தை வீழ்த்த குரோஷியா வியூகம்

மாஸ்கோ, ஜூலை 11: பிபா உலக கோப்பை கால்பந்து போட்டியின் இன்று நடைபெற உள்ள இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து அணியை குரோஷியா அணி எதிர்கொள்கிறது.

உலக கோப்பை கால்பந்து தொடர் ஒருவழியாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கெனவே பெல்ஜியத்தை வீழ்த்தி பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டது. இந்த நிலையில், இறுதிப்போட்டியில் நுழையப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – குரோஷியா அணிகள் மோதுகின்றன. மாஸ்கோ நகரில் உள்ள லூஸ்னிக்கி மைதானத்தில் இன்று இரவு 11.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. கடைசியாக 1966-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அதன் பின்னர்
சோபிக்கவில்லை.

1990-ம் ஆண்டு ஒரே முறை அரையிறுதிக்கு முன்னேறி மேற்கு ஜெர்மனியிடம் தோல்வியைத் தழுவியது. தற்போது, இளம் பட்டாளங்களை கொண்டு கேப்டன் ஹாரி கேன் (6 கோல்கள்) தலைமையில் துடிப்புடன் களமிறங்கும் இங்கிலாந்து அணியில், ஹாரி மேக்குயர், டெலி அலி, ஜோர்டான் ஹென்டர்சன், லிங்கார்ட் உள்ளிட்டோர் நங்கூரமாக திகழ்கின்றனர்.

மறுமுனையில் குரோஷியா அணி உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது முறை அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. கடைசியாக 1998 உலக்க கோப்பை அரையிறுதியில் பிரான்ஸிடம் தோற்று 3-ஆம் இடத்தை பெற்றது. எனவே இம்முறை எப்படியேனும் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட வேண்டும் என்ற வேட்கையுடன் களம் காண்கிறது. அந்த அணியின் கோல் கீப்பர் சுபாஸிக்கை தாண்டி பந்து கோல் போஸ்ட்டுக்குள் செல்வது அவ்வளவு சுலபமில்லை.

வீரர்கள் மொட்ரிக், மண்டுஸூகிக் நம்பிக்கை அளிக்கின்றனர். இதில் வெற்றி பெறும் அணி வரும் 15-ம் தேதி இறுதிப்போட்டியில் பிரான்சுடன் நடக்கும் போட்டியில் பங்கேற்கும். தோல்வி
காணும் அணி, 14-ம் தேதி நடைபெற உள்ள 3-வது இடத்திற்கான பிளே ஆப் போட்டியில் பெல்ஜியத்துடன் மோதும்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*