Home » விளையாட்டு » பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்த பிரான்ஸ்

பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்த பிரான்ஸ்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ஜூலை 11:ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி பெல்ஜியம் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

ஃபிபா உலகோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன. தற்போது கிளைமேக்ஸ் கட்டத்தை நெறுங்கி உள்ளது. நேற்று இரவு நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் தரவரிசைப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ள பெல்ஜியம் அணியும், 7வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணியும் இப்போட்டியில் மோதிக்கொண்டன. இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு போட்டி தொடங்கியது.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர்.ஆனால் இரு நாட்டு கோல் கீப்பர்களும் பந்தை அபாரமாக தடுத்து நிறுத்தினர். இதனால் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் 0 – 0 என சமனிலை வகித்தன.இரண்டாவது பாதி தொடங்கியதும் ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் சாமுவேல் ஒரு கோல் அடித்தும் அரங்கமே அதிர்ந்தது. எவ்வளவு முய்றித்தும் பெல்ஜியத்தால் ஒரு கோல் கூட அடிக்கமுடியவில்லை. இறுதியில், 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் அணி இறுதி போட்டியில் நுழைந்தது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*