Home » அரசியல் » ராகுல்காந்தியுடன் பா.ரஞ்சித் சந்திப்பு

ராகுல்காந்தியுடன் பா.ரஞ்சித் சந்திப்பு

புதுடெல்லி, ஜூலை 11: மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கிய பா.ரஞ்சித் புதுடெல்லியில் நேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். அவருடன் நடிகர் கலையரசனும் உடன் சென்றார்.

ராகுல்காந்தியுடன் அரசியல் நிலவரம், சமூதாயப் பிரச்சனை மற்றும் திரைப்படங்கள் குறித்து விவாதித்ததாக ரஞ்சித் கூறியுள்ளார்.அதேபோல் ராகுல்காந்தியும் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஞ்சித் உடனான சந்திப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசிய நிலையில், ரஜினிகாந்தின் உத்தரவின் பேரில் அவரின் தூதராக ரஞ்சித் காங்கிரஸ் ராகுல்காந்தியை சந்தித்து பேசினாரா? அல்லது தனது சமூதாயம் சார்ந்த நிலைபாடுகளை திரைப்படங்கள் வாயிலாக எடுத்துக்கூறுவதை அவரிடம் விளக்குவதற்காக சென்றாரா? என பல்வேறு கோணங்களில் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின்றன.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*