Home » சினிமா » அன்புமணிக்கு சவால் விடும் சிம்பு

அன்புமணிக்கு சவால் விடும் சிம்பு

‘மாநாடு’ திரைப்படம் குறித்துப் பேசுகையில் சிம்பு  சொன்னது. படத்துக்கு ‘மாநாடு’ என்று பெயர் வைத்திருப்பதால் அடுத்ததாக நான் அரசியலுக்கு வரப்போகிறேன், அதற்கு ஒரு முன்னோட்டமாக இருக்கட்டுமே! என்று தான் இப்படி ஒரு பெயரை என் படத்திற்கு சூட்டியிருப்பதாக தயவு செய்து யாரும் தவறாக நினைத்து விடாதீர்கள். வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நெடுநாள் விருப்பம். தற்போது அது நிறைவேறி இருக்கிறது. அத்திரைப்படத்தில் அரசியல் இருக்குமே தவிர என் சொந்த வாழ்க்கையில் நிச்சயம் அரசியலுக்கு இடமில்லை.

அது மட்டுமல்ல, சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘சர்கார்’ திரைப்பட போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பதைப் போன்ற புகைப்படம் இடம்பெற்றதால் பாமகவின் அன்புமணி ராமதாஸ் அங்கிள், திரைப்படங்கள் இளைஞர்களிடையே மோசமான பழக்க வழக்கங்களைத் திணிக்கின்றன என்றும். அப்படியான திரைப்படம் எடுப்பவர்கள் மற்றும் அதில் நடிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.

அவரிடம் எனக்கு ஒரு வேண்டுகோள் என்னவென்றால். தயவு செய்து நாட்டில் நடக்கக்கூடிய அத்தனை விஷயங்களுக்கும் திரைப்படங்களைக் காரணமாக்கி விடாதீர்கள். திரைப்படங்களை வெறும் திரைப்படங்களாக மட்டுமே பார்த்து ரசியுங்கள். என்னால் இதுகுறித்து நேரடியாகத் தங்களுடன் விவாதிக்க முடியும். உங்களது அத்தனை கேள்விகளுக்கும் பதில் அளிக்கவும் முடியும். எனவே பொதுமக்கள் மத்தியில் இது குறித்து நேருக்கு நேர் விவாதத்தில் கலந்து கொள்ள நான் ரெடி ஆங்கிள்.
நீங்களும் ரெடியா?’ என்று எதிர்கேள்வி தொடுத்திருக்கிறார் சிம்பு.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*