Home » Flash News » பாதாள அறையில் 59 குழந்தைகள்¦சிறை வைப்பு

பாதாள அறையில் 59 குழந்தைகள்¦சிறை வைப்பு

புதுடெல்லி, ஜூலை 11:டெல்லியில் ஒரு பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்தாத 59 குழந்தைகளை பாதாள அறையில் பூட்டி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 9-ம் தேதி பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வந்த பெற்றோர், தங்களின் குழந்தைகள் அழுது அழுது சோர்ந்து போயிருப்பதை பார்த்து அதிர்ந்தனர்.

குழந்தைகளிடம் கேட்ட போது, பள்ளியில் காற்றோட்டமற்ற அறையில் 5 மணி நேரமாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அந்த பள்ளியின் நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். குழந்தைகளை கொடுமைப்படுத்தியதாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளி நிர்வாகத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*