Home » Flash News » முக்கிய நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை

முக்கிய நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை

சென்னை, ஜூலை 11:டார்ஜிலிங்கில் படப்பிடிப்பை முடித்து கொண்டு நேற்றிரவு சென்னை திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது இயக்க முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்கிடையே ரஜினியின் நண்பரும், காந்திய மக்கள் இயக்க தலைவருமான தமிழருவி மணியன் ரஜினியை சந்தித்து பேசினார்.

கடந்த டிசம்பர் மாதம் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்த கொண்ட ரஜினி, தாம் விரைவில் அரசியலில் ஈடுபடப்போவதாகவும், சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக அறிவித்தார். ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை தொடங்கி தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களுக்கும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை நியமித்தார்.

அதன் பின்னர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்களை நடத்தி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தினர். தற்போது ரஜினி மக்கள் மன்றத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 1 கோடியை தொட்ட நிலையில், கட்சியை தொடங்குவது குறித்து ஆலோசனைகளை நடத்தினார். இதற்கிடையே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பதற்காக ரஜினிகாந்த் கடந்த மாதம் 5-ந் தேதி டார்ஜிலிங் புறப்பட்டு சென்றார்.

காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோரை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் நேற்றிரவு சென்னை திரும்பிய ரஜினிகாந்த் இன்று காலை போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளர் ராஜூ மகாலிங்கம், ரசிகர் மன்ற தலைமை நிர்வாகி வி.என்.சுதாகர் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலேசானை நடத்தினார்.

அதே நேரத்தில் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனும் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். அப்போது நவம்பரில் ரஜினி தொடங்க உள்ள புதிய கட்சி குறித்தும், உறுப்பினர் சேர்க்கை ஒரு கோடியை தொட்டுள்ளது குறித்தும் இருவரும் விவாதித்தனர். மேலும், முதல் மாநாட்டை கோவையில் நடத்துவது பற்றியும் பேசியதாக தெரிகிறது.

இதற்கிடையே டாக்டர் பட்டம் பெற்றுள்ள எம்ஜிஆர் பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகத்திற்கு சென்னையில் இன்று மாலை நடைபெறும் பாராட்டு விழாவில் ரஜினி பங்கேற்பார் என்றும்
தெரிகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*