Home » முக்கிய செய்தி » உலகக் கோப்பை கால்பந்து: யாருக்கு ‘கோல்டன் பால்’ விருது?

உலகக் கோப்பை கால்பந்து: யாருக்கு ‘கோல்டன் பால்’ விருது?

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் வழங்கப்படும் விருதுகளில் மிகவும் உயரிய விருதாகக் கருதப்படுவது ’கோல்டன் பால்’ விருது. இது உலகக் கோப்பை தொடரின்  சிறந்த வீரருக்கு வழங்கப்படும். திறன், திறமை, கோல் அடிக்கும் லாவகம் மற்றும்  சர்வதேச ஊடகங்களின் வாக்குகளின் அடிப்படையில் இதற்கான வீரர்களை பிபா அமைப்பின் தொழிநுட்ப குழுவினர் தேர்வு செய்கின்றனர்.

நடப்பு உலகக் கோப்பை சீசனில் உலக புகழ்பெற்ற வீரர்களான லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் ஆகியோர் அடுத்தடுத்து போட்டியில் இருந்து வெளியேறிவிட்டதால், இந்தாண்டு யாருக்கு ’கோல்டன் பால்’ விருது கொடுக்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
மேலும் தொடரில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை
பிடிக்கும் வீரர்களுக்கும் முறையே வெள்ளி மற்றும் வெண்கல பந்துகளும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

‘கோல்டன் க்ளவ்’ பெறப்போவது யார்?
மற்ற விருதுகளுடன் ஒப்பிடுகையில் ’கோல்டன் க்ளவ்’ விருது வழங்கப்படும் முறை சற்று வித்தியாசமானவை. இறுதிப்போட்டியில் வெற்றியடைந்து உலக கோப்பையை வெல்லும் அணியின் கோல் கீப்பருக்கு தான் ’கோல்டன் க்ளவ்’ விருது வழங்கப்படும்.

அந்த வகையில், தற்போதைய நிலவரப்படி, பிரான்ஸின் கோல்கீப்பர் ஹியூகோ, பெல்ஜியத்தின் தீபட் கர்டாய்ஸ், இங்கிலாந்தின் ஜோர்தான், குரோஷியாவின் டேனிஜெல் ஆகிய 4 கோல்கீப்பர்களில் யாரேனும் ஒருவர் இவ்விருதினை பெறுவர்.  இதேபோல், அதிக கோல்கள் அடிக்கும் வீரருக்கு வழங்கப்படும் ’கோல்டன் பூட்’ விருது, நடப்பாண்டில் அநேகமாக இங்கிலாந்து கேப்டன் ஹரிகேன் தான் பெறுவார் என்று தெரிகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*