Home » Flash News » இன்றிரவு சென்னை திரும்புகிறார் ரஜினி

இன்றிரவு சென்னை திரும்புகிறார் ரஜினி

சென்னை, ஜூலை 10:  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் டார்ஜிலிங்கில் நடந்த படிப்பிடிப்பை முடித்துக்கொண்டு இன்றிரவு  சென்னை திரும்புகிறார். நாளை முதல் மீண்டும் கட்சி பணிகளில் ஆர்வம் காட்ட அவர் முடிவு செய்துள்ளார். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படம் கடந்த ஜூன் மாதம் வெளியானது. இதனையடுத்து இளம் இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படப்பிடிப்பு மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கடந்த மாதம் 5-ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்த் ஜூன் 5-ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் டார்ஜிலிங் புறப்பட்டு சென்றார்.

அங்கு ரிசர்ட்டில் தங்கியிருந்து படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொண்டார்.
ரஜினி அங்கு தங்கியிருந்ததால் அந்த ரிசார்டுக்கு ‘ரஜினிகாந்த் வில்லா 3’ என்றும், அவர் விரும்பி குடித்த டீக்கு ‘தலைவா டீ’ என்றும் ஹோட்டல் நிர்வாகம் பெயர் சூட்டி பெருமைப்படுத்தியது.
இந்நிலையில், 35 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பில் உற்சாகத்துடன் கலந்து கொண்ட ரஜினிகாந்த் தனது காட்சிகளை முடித்துக்கொண்டு இன்றிரவு டார்ஜிலிங்கில் இருந்து கொல்
கத்தா வந்து அங்கிருந்து சென்னை வந்தடைகிறார்.

படப்பிடிப்பு தளத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.  இன்றிரவு சென்னை திரும்பியதும் ரஜினி மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளார். நாளை முதல் நிர்வாகிகள் சந்திப்பு, அரசியல் கட்சி தொடங்குவது குறித்த ஆலோசனை என கட்சிப்பணிகளில் அவர் ஆர்வம் காட்ட உள்ளதாக தெரிகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ரஜினியின் 163-வது படத்தில் ரஜினியுடன் சிம்ரன், அஞ்சலி ஆகியோர் கதாநாயகியாக நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*