Home » உலகம் » ஹெலிகாப்டரில் தலை தப்பிய பெண் செய்தியாளர்

ஹெலிகாப்டரில் தலை தப்பிய பெண் செய்தியாளர்

க்கு, ஜூலை 3: அஸர்பைஜான் நாட்டில் தாழ்வாகப் பறந்து சென்ற ஹெலிகாப்டரின் தாக்குதலில் இருந்து பெண் பத்திரிகையாளர் ஒருவர் தப்பினார். எஸ்பிஎஸ் என்ற தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளராக எல்மைரா முசாஸாதே என்பவர் பணியாற்றி வருகிறார். அஸர்பைஜான் நாட்டு விமானப்படையின் 100-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நேரடி ஒளிபரப்பில் ஈடுபட்டு வந்தார்.

விமான ஓடுதளத்தில் நின்றவாறு அவர் செய்தி கொடுத்துக் கொண்டிருந்த போது, ஹெலிகாப்டர்கள் ஒன்றன் பின் ஒன்றாக பறந்து சென்றன. அதில் ஒரு ஹெலிகாப்டர் எல்மைராவின் தலையிலிருந்து ஒரு அடிக்கும் குறைவான இடைவெளியில் கடந்து சென்றது. இதனால் அவர் பெரும் விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*