Home » அரசியல் » தி.மு.க. உறுப்பினர் வெளியேற்றம்

தி.மு.க. உறுப்பினர் வெளியேற்றம்

சென்னை, ஜூலை 4: சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர் அன்பழகன் வெளியேற்றப்பட்டார்.

சட்டசபையில் இன்று மீனவர் பிரச்சனை குறித்து திமுக உறுப்பினர் சாமி எழுப்பிய கேள்விக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.

இப்பிரச்சனை குறித்து அரசு எடுத்த நடவடிக்கைகளை விவரித்த அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுமானால் உங்களையும் அழைத்துக் கொண்டு பிரதமரை சந்திக்க தயார் என்று கூறினார்.

தொடர்ந்து பேச சாமிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று திமுக உறுப்பினர்கள் கூறினார்கள். அவர்கள் கூச்சலிட்டதால் அவையில் அமளி ஏற்பட்டது.
கே.பி.அன்பழகன் இருக்கையில் இருந்து எழுந்து சபாநாயகரின் இருக்கையை நோக்கி சென்று சத்தமிட்டார். இதனை தொடர்ந்து அன்பழகன் மீது நடவடிக்கை எடுக்கும் படி அவை முன்னவர் செங்கோட்டையன் கேட்டுக் கொண்டார். அப்போது முதல்வர் பேச முற்பட்டார். அப்போதும் அன்பழகன் தொடர்ந்து கூச்சலிட்டபடி இருந்தார்.

முதலமைச்சர் பேசும்போதும், அமைச்சர்கள் பேசும்போதும் சபாநாயகர் உத்தரவிட்ட போதும், கொறடா கேட்டுக்கொண்ட பிறகும் அவற்றை எல்லாம் மதிக்காமல் தொடர்ந்து கூச்சலிடுவதால் அன்பழகனை வெளியேற்ற உத்தரவிடுவதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.

அவர் வேண்டும் என்றே அவை நடவடிக்கைகளை மதிக்காமல் குந்தகம் விளைவித்து வருகிறார். அவர்களது நடவடிக்கைகளை பார்க்கும் போது வேண்டும் என்றே அவையில் பிரச்சனை எழுப்ப முயல்கிறார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

எங்களுக்கு யாரையும் வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அவையை அமைதியாக நடத்த வேண்டும். அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

அவர் மீதான நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்தார். அவர் யாருக்கும் கட்டுப்படாமல் இருப்பதால் தான் ஒரு நாள் மட்டும் நடவடிக்கை எடுத்திருப்பதாக துணை சபாநாயகர் தெரிவித்தார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*