Home » சினிமா » சாயிஷாவின் திரில் அனுபவம்

சாயிஷாவின் திரில் அனுபவம்

Sayesha Saigal hot images latest photos

வட இந்தியாவில் இருந்து கோலிவுட்டிற்கு வரும் கதாநாயகிகள் அதிகம். அந்த வரிசையில் வனமகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளவர் நடிகை சாயிஷா.இவர் தற்போது 3 முன்னணி நடிகர்களுடன் மூன்று படங்களில் நடித்து முடித்துள்ளார்.

தனது அனுபம் குறித்து சாயிஷா கூறியதாவது:-

கேள்வி:- என்னென்ன படங்களில் நடித்துள்ளீர்கள்?
பதில்:- ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்திலும், கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் படத்திலும் நடித்து முடித்துள்ளேன். விஜய் சேதுபதியுடன் ஜுங்கா படத்தில் நடித்துவருகிறேன்.

கே:- இந்த படங்களை எப்படி தேர்வு செய்தீர்கள்.
ப:- வனமகனுக்கு பிறகு புதுவிதமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என நினைத்தேன். அதற்கேற்றார் போல் இந்த 3
படங்களிலும் 3 விதமான லுக் மற்றும் ஆக்டிங் ஸ்கில் அமைந்தது.

கே:- கிராமத்து பெண் கதாபாத்திரம் எப்படி…?
ப:- கடைக்குட்டி சிங்கம் படத்தின் கதையை இயக்குனர் பாண்டிராஜ் சொன்னவுடன் பிடித்தது. கிராமத்து பெண் கேரக்டர் என்பதால் எனக்கு இது மிகவும் சவாலான கதாபாத்திரம். இதற்காக எனது தோல் நிறத்தை 4 லேயர் அளவிற்கு மேக்கப் போட்டு மாற்றினார்கள். மேக்கப் போடவே ஒன்றரை மணி நேரமாகும்.

கே:- மூன்று இயக்குனர்கள் பற்றி சொல்லுங்கள்.
ப:- வில்லேஜ் சப்ஜெக்ட் என்பதால் பாண்டிராஜ் ரொம்ப புரொபஷன் எதிர்பார்த்தார். அதற்கு ஏற்றார் போல் நாங்கள் நடிக்க வேண்டும். ஒரு காட்சிக்காக 50 டேக் வரை எடுக்க வேண்டி இருந்தது. இருப்பினும் நான் 7, 8 டேக்குகளில் முடித்து விடுவேன். கஜினிகாந்த் இயக்குனர் சந்தோஷ் மிகவும் ஜாலியானவர். அதனால் அந்த படத்தில் நடித்ததே எனக்கு தெரியவில்லை. ஜுங்கா இயக்குனர் கோகுல் மிகவும் சீரியசானவர். அவரே படத்தின் தயாரிப்பாளர் என்பதால் டென்ஷனுடன் வெளிநாடுகளில் படத்தை எடுத்து வருகிறார்.

கே:- உடன் நடித்த நடிகர்கள் எப்படி?
ப:- கார்த்தி நல்ல மனிதர். மிகவும் அமைதியானவர். செட்டில் இருப்பதே தெரியாது. ஆனால் காட்சி என்று வந்துவிட்டால் தீப்பிழம்பாக நடிப்பார். ஸ்கிரிப்டில் அதிகம் கவனம் செலுத்துவார். விரைவில் அவர் படத்தை இயக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஆர்யா செம ஜாலியானவர். அவருடன் இருந்தால் பொழுது போவதே தெரியாது. அதேபோல் விஜய் சேதுபதியும் நேச்சுரலான நடிகர். எந்த டயலாக் கொடுத்தாலும் காட்சியில் பின்னி எடுத்துவிடுவார்.

கே:- வேறு எந்த மொழியில் நடிக்கிறீர்கள்?
ப:- நான் ஏற்கனவே ஹிந்தி மற்றும் தெலுங்கில் தலா ஒரு படங்கள் நடித்து முடித்துள்ளேன். தற்போது ஒரே நேரத்தில் தமிழில் 3 படங்கள் நடித்து வருவதால் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களை ஒப்புக்கொள்ளவில்லை.

கே:- ஒரே நேரத்தில் 3 படங்களில் எப்படி நடிக்க முடிந்தது.
ப:- 3 படங்களில் ஒரே நேரத்தில் நடித்தது மிகவும் த்ரிலிங்காக இருந்தது. இரவு, பகலாக படப்பிடிப்பு இருந்ததால் தொடர்ந்து 48 மணி நேரம் தூங்காமல் படப்பிடிப்பில் பங்கேற்றேன். கஜினி காந்த் படத்தை 30 நாளில் முடித்து விட்டனர். இதனால் சற்று ஓய்வு கிடைத்தது. அதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம் படத்திற்காக தென்காசி சென்றுவிட்டேன். பின்னர் ஜுங்கா படத்திற்காக ஆஸ்திரேலியா, பாரீஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் பறந்து சென்று நடித்து வருகிறேன். இந்த 3 படங்களும் வெளியான பிறகு தமிழில் எனக்கு நல்ல இடம் கிடைக்கும் என நம்புகிறேன்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*