Home » சினிமா » நயன்தாரா நடிக்கும் ஹாரர் படம்

நயன்தாரா நடிக்கும் ஹாரர் படம்

தமிழ் சினிமாவின் 15 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நடிகையாக இருப்பவர் நயன்தாரா. கடந்த ஆண்டு அவர் நடித்த அறம் படம் பல்வேறு பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்று தந்தது. தற்போது மீண்டும் கோட்டபாடி ஜெ ராஜேஷ் தயாரிக்கும் புதிய படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத நயன் 63 ஒரு ஹாரர் படம். மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய கே.எம்.சர்ஜூன் இயக்குகிறார். இதற்கு முன்னதாக இவர் மா என்ற குறும்படத்தையும், வெளி வர தயாராக இருக்கும் எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தையும் இயக்கியிருக்கிறார். சென்னையில் இன்று காலை படப்பிடிப்பு துவங்கியது.

இது குறித்து தயாரிப்பாளர் ராஜேஷ் கூறுகையில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். இந்த இளம் படக்குழுவின் ஆற்றல், ஒவ்வொரு காட்சிக்கும் அவர்கள் போடும் உழைப்பையும் கண்கூடாக பார்த்ததால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒரு சென்சேஷனல் படம் கொடுக்கும் சவாலான விஷயமாகவும் இது அமைந்திருக்கிறது என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*